Last Updated : 16 Mar, 2014 12:00 AM

 

Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

மோடியைக் காப்பாற்றும் ஊடகங்கள்: கேஜ்ரிவால் மீண்டும் தாக்கு

குஜராத்தில் நரேந்திர‌ மோடி செய்த பல்வேறு தவறுகளிலிருந்து அவரை ஊடகங்கள் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

மக்களவை தேர்தலுக்காக பெங்களூரில் சனிக்கிழமை சாலையோர பிரச்சாரத்தில் ஈடு பட்டார் கேஜ்ரிவால். பெங்களூரின் ஹெப்பாளில் காலை 7 மணிக்கு தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர், திறந்த வாகனத்திலும் வாடகை ஆட்டோவிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனிடையே செய்தியாளர் களிடம் கேஜ்ரிவால் கூறியதாவது:

நரேந்திர மோடியை தாக்கி பேசினால் பா.ஜ.க. மட்டு மல்லாமல் சில ஊடகங்களும் கொதிப்படைகின்றன. அதனால் பெங்களூரில் நான் மோடியை தாக்கி பேசப்போவதில்லை. மாறாக தைரியம் இருக்கும் ஊடகங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லட்டும்.

குஜராத்தின் வளர்ச்சி குறித்தும் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி குறித்தும் பேசும் ஊடகங்கள், மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் 60 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவை குறித்து ஏன் எழுதுவதில்லை?

இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களை வெளிச் சமிட்டு காட்டும் ஊடகங்கள் மோடி யின் ஊழலை கண்டுக்கொள்ளாமல் மௌனம் காப்பது ஏன்?

வளர்ச்சி, செல்வம் என ஆர்ப்பரிக்கும் மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் 800 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இதுபற்றி ஏன் ஊடகங்கள் கேள்வி கேட்க வில்லை?

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்கு காரண மான மோடியை ஊடகங்கள் ஏன் வளர்ச்சியின் நாயகனாக சித்தரிக்கின்றன. அவர் செய்த தீமைகளை பட்டியலிட தைரியம் இல்லையா? குஜராத்திற்கு சென்று மோடியையும் அவருடைய மிகக் கேவலமான ஆட்சியையும் தட்டிக் கேட்க ஊடகங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

விருந்து...

ஊடகங்களைக் கடுமையாக விமர்சித்து வரும் கேஜ்ரிவால், வெள்ளிக்கிழமை இரவே பெங்களூர் வந்தார். சனிக்கிழமை காலையில் 20 முக்கிய பத்திரிகையாளர்களுடன் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல 20 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி பதிவு செய்தவர்களுடன் விவாதித்துக் கொண்டே சனிக்கிழமை இரவு உணவு அருந்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x