Published : 06 May 2017 05:29 PM
Last Updated : 06 May 2017 05:29 PM
காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு பிரதமர் மோடிதான் ஒரே நம்பிக்கை என்று காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.
காஷ்மீரில் மேம்பாலம் ஒன்றின் திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற மெகபூபா முப்தி காஷ்மீரில் நிலவும் வன்முறை குறித்து கூறும்போது, "காஷ்மீரில் நிலவும் வன்முறைகளிலிருந்து மக்களை பிரதமர் மோடியை தவிர வேறு யாரால் காப்பாற்ற முடியும்? அவரிடம் அதிகாரம் உள்ளது. அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும். முன்பு என் தந்தை முப்தி முகமத் சையத் மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன்மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் இருந்தது. எனவே காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு பிரதமர் மோடிதான் ஒரே நம்பிக்கையாக இருக்கிறார்" என்றார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்துவரும் கலவரங்களால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த நிலையில், காஷ்மீர் ஆளுநர் வோரா, பிரதமர் மோடியை டெல்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT