Published : 12 Apr 2017 10:37 AM
Last Updated : 12 Apr 2017 10:37 AM
ஆந்திர மாநிலத்தில் குச்சுப்புடி நடனத்தைப் பிரபலப்படுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். இந்த நிலை யில், அம்பேத்கரின் 125-வது ஆண்டு விழாவையொட்டி, நேற்று விசாகப்பட்டினத்தில், அரசு விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவிகள் 7,000 பேர் பங்கேற்கும் குச்சுப்புடி நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடங்கி வைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய தாவது: அமராவதியில் 125 அடி உயரத்தில் அண்ணல் அம்பேத் கருக்கு சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அரசு விடுதிகளில் தங்கிப்படிக்கும் 7,000 மாணவிகள் ஆடிய குச்சுப் புடி நடனம் என்னை மிகவும் கவர்ந்தது.
வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் குச்சுப்புடி நடனத்தை கட்டாய மாக்குவது குறித்து அரசு ஆலோ சித்து வருகிறது. குச்சுப்புடி நடனம் உடல் ஆரோக்கியமாக இருக்க வும் உதவுகிறது.
இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், காகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம் மாவட்டங்களில் உள்ள 21 அரசு விடுதி மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பள்ளி களுக்கும் சமூக நலத்துறை சார்பில் ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதால், விரைவில் இது உலக அளவில் பிரசித்தி பெறும் என கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ரூபவதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT