Published : 01 Mar 2014 12:00 AM
Last Updated : 01 Mar 2014 12:00 AM
ஆந்திர மாநிலத்தில் 41 ஆண்டு களுக்கு பிறகு 2-வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட உள்ளது. இது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 122-வது முறையாக பிறப்பிக்கப்படும் குடியரசு தலைவர் ஆட்சியாகும்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து ஹைதராபாதை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலம் உருவாக்கக் கோரி கடந்த 58 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மிகவும் தீவிரமானது.
கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தைப் பிரிக்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங் களை நடத்தினர்.
மசோதா நிறைவேற்றம்
இந்நிலையில் கடும் எதிர்ப்பு களையும் மீறி மத்திய அரசு ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவை தயாரித்து ஆந்திர சட்டசபைக்கு அனுப்பி வைத்தது.
அந்த மசோதாவை சட்ட சபை நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டபோதிலும், சில திருத்தங் களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆரம்பம் முதலே மாநில பிரிவினையை எதிர்த்து வந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.
அமைச்சரவை பரிந்துரை
இதையடுத்து, புதிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வந்தது. சீமாந் திராவுக்கு மத்திய அமைச்சர் சிரஞ்சீவி முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகிய தால் புதிய அரசு அமைக்கும் முடிவு கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
41 ஆண்டுகளுக்கு பின்னர்
கடந்த 1973-ம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது, 'ஜெய் ஆந்திரா' போராட்டம் நடைபெற்றது. அப் போது போராட்டத்தை சமாளிக்க முடியாததால் சட்டம்-ஒழுங்கு பிரச் சினை தலை தூக்கியது.
இதனைத் தொடர்ந்து, 11-1-1973 முதல் 10-12-1973 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு 41 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது 2-வது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட உள்ளது.
122-வது முறை
நாட்டில் 122-வது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக் கப்பட உள்ளது. இதில் அதிகபட்சமாக மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 10 முறை குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 முறையும், பிஹார், பஞ்சாப் மாநிலங்களில் தலா 8 முறையும், புதுச்சேரி, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 6 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
அசாமில் 4, டெல்லி 1, கோவா 5, ஹரியாணா 3, ஹிமாச்சல பிரதேசம் 2, ஜம்மு & காஷ்மீர் 5, ஜார்க்கண்ட் 3, கேரளா 5, மத்திய பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 2, மிஜோரம் 3, நாகாலாந்து 4, ராஜஸ்தான் 4, சிக்கிம் 2, திரிபுரா 3, மேற்கு வங்கம் 4 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 முறை
தமிழ்நாட்டில் 4 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் முதன்முறையாக கருணா நிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு கடந்த 31.1.1976 முதல் 30.6.1977 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 17.2.1980 முதல் 6.6.1980 வரையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின்னரும், 30.1.1988 முதல் 27.1.1989 வரையில் ஜானகி எம்ஜிஆர் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தபோதும்,
இறுதியாக, கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு கடந்த 30.1.1991 முதல் 24.6.1991 வரையிலும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT