Published : 31 Dec 2013 12:00 AM
Last Updated : 31 Dec 2013 12:00 AM
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ரூ.69 கோடி செலவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான பாதுகாப்பை பலப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தேவஸ்தானத்துக்கு சொந்த மான புராதான கோயில்கள் மற்றும் கட்டிடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக, திருமலை-திருப்பதி தேவஸ்தான கண்காணிப் புக் குழு ஆந்திர அரசிடம் சமீபத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு ஒப்புதல் அளித்த அரசு, 3 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரக் கடத்தல்காரர்கள் இரண்டு வனத்துறை அதிகாரிகளை கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதவிர, புத்தூர் அருகே இரண்டு தீவிரவாதிகள் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பதிக்கான பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி - திருமலை இடையிலான வழிகள் மற்றும் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து திரு மலைக்கு காட்டு வழியாக செல்லும் 10 வழித்தடங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வனப்பகுதி வழிகளிலும் கூடாரம் அமைத்து, ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனர். இதற்காக சேஷாசலம் வனப்பகுதிகளில் கூடுதலாக அவுட் போஸ்டுகள் அமைக்கப்பட உள்ளன.
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியிலிருந்து திருமலை வரையில் கண்காணிப்புப் பணி யைத் தீவிரப்படுத்தும் வகையில், கூடுதலாக 2,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
மேலும் ஏழுமலையான் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் வேலி அமைக்கப் படவுள்ளன. இதனால் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர்கள் வழியாக மாட வீதிக்குள் அனுமதிக்கப்படுவர்.
ஆண்டுதோறும் பெருகி வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, திருமலையைச் சுற்றிலும் 9 கிலோமீட்டர் சுற்றளவில் வட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.
விபத்துகளைத் தடுக்க, திருப்பதி மலையடிவாரத்திலி ருந்து திருமலையை 28 நிமிடங்க ளிலும், திருமலையில் இருந்து அடிவாரத்தை 40 நிமிடங்களிலும் அடையும் வகையில் வேகக் கட்டுப் பாடு முறை அமல்படுத்தப்பட உள்ளது. மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், அடிக்கடி கட்டுப்பாட்டை மீறும் வாகனங்கள் திருமலைக்கு வர தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT