Last Updated : 12 Mar, 2014 12:00 AM

 

Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை இல்லை: உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று அருண் ஜெட்லி கருத்து

ஊழல் மற்றும் இதர கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதன் விசாரணையை தாமதப்படுத்த உரிமை இல்லை என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை வரவேற்று செவ்வாய்கிழமை அளித்த அறிக்கையில் கருத்து கூறியுள்ளார்.

குற்றம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் விசாரணையை நீதிமன்றங்கள் முடிக்க வேண்டும் என்று இது குறித்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதை வரவேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி இழுத்தடிக்க எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு உரிமை கிடையாது.

இந்திய அரசியலில் கிரிமினல்மயம் என்பது, மிக மோசமான பிரச்சனையாக தொடர்ந்து வருகிறது. கிரி மினல் குற்றங்களுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள பலரை அரசி யல் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துகின்றன.

சட்டப்படி தண்டிக்கப்பட்ட வர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்க தகுதி இழக்கிறார்களே தவிர, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அரசியல் வாதிகளுக்கு எந்த தடைகளும் இல்லை. இது மக்கள் மனதில் அரசியலின் தன்மையைப் பற்றிய மோசமான எண்ணத்தை உரு வாக்குகிறது. சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவிர, ஒருவர் குற்றமற்றவராக கருதப்படுகிறார்.

இது நீதியின் தேவைக்கும், மக்கள் எண்ணத்துக்கும் ஒரு இடைவெளியை உருவாக்குகிறது.

தடை விதிக்கும் மசோதா

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது இதற்கான ஒரு முயற்சி எடுக்கப்பட்டு, மோசமான குற்றங்களுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் ஒரு மசோதா தயாரிக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் அதை நிராகரித் தன. இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு நீதியின் கோட்பாட்டையும் பாதுகாக் கிறது. அதே நேரத்தில் குற் றத்தை நிரூபிப்பதற்காக வழக்கு விசாரணையை துரிதப்படுத்து கிறது.

இதன்மூலம் அரசியல்ரீதியாக பழிவாங்குவதற்காக சில மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராகவும் ஏற் பாடு செய்யப்பட்டிருப்பதும் வர வேற்கத்தக்கது என்று ஜெட்லி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x