Published : 21 Aug 2016 01:06 PM
Last Updated : 21 Aug 2016 01:06 PM

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த சிறிசேனா

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சனிக்கிழமை இரவு பெங்களூரில் இருந்து காரில் சாலை மார்க்கமாக சிறிசேனா திருப்பதிக்கு வந்தார். இவரை ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ணா ரெட்டி, எஸ்.பி. ஜெயலட்சுமி உள்ளிட்டோர் வரவேற்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திருமலைக்கு சென்றனர்.

இலங்கை அதிபர் சிறிசேனாவை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இரவு திருமலையில் தங்கிய சிறிசேனா இன்று காலை ஏழுமலையானை தரிசித்தார்.

பின்னர் தரிசனம் முடிந்ததும் உடனடியாக புறப்பட காரில் ஏறினார். ஆனால் அவர் கார் ஓட்டுநர் தரிசனம் செய்யச் சென்றதால் சிறிசேனா சுமார் 20 நிமிடங்கள் வரை ஓட்டுநருக்காக காரிலேயே காத்திருந்தார். அதன் பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் ஓட்டுநரை அழைத்து வந்தனர். இந்த சம்பவம் திருமலையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அதிபர் திருப்பதி வருவதை தேவஸ்தான அதிகாரிகள் மிக ரகசியமாக வைத்திருந்தனர். திருப்பதி போலீஸாருக்கு கூடசரியான தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

எஸ்.பி.ஜெயலட்சுமி இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x