Last Updated : 28 Feb, 2015 10:50 AM

 

Published : 28 Feb 2015 10:50 AM
Last Updated : 28 Feb 2015 10:50 AM

மத்திய பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கார்பரேட் வரி படிப்படியாக 25% வரை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவை வரி அதிகரிப்பின் எதிரொலியாக பல்வேறு பொருட்கள், சேவைகளின் மதிப்பில் மாற்றம் நிலவும். | முழுமையான பட்டியலுக்கு - > பட்ஜெட் எதிரொலி: விலை உயர்பவையும் குறைபவையும் |

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார்.

| இந்த பட்ஜெட் குறித்த சிறப்புப் பார்வை - வீடியோ வடிவில் கீழே |

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட்டின் நிகழ்நேரப் பதிவின் தொகுப்பு:

13.25 PM:தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதே ரூ.2.5 லட்சத்தில் தொடர்கிறது. அதேவேளையில், வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.4,44,200 வரிச் சலுகை கிடைக்கும்.அதற்கான விளக்கம் இதோ:>ரூ.4.4 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறுவது எப்படி? |

13.20 PM:

13.18 PM: கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் கருப்புப் பண பதுக்கலில் ஈடுபடுவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்படும்.

12.15PM: மருத்துவ காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.30,000 ஆகவும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு மொத்த செலவில் இருந்து ரூ.30,000 கழித்துக் கொள்ளப்படும்.

12.10 PM: தூய்மை இந்தியா, தூய்மை கங்கா திட்டத்துக்கு நிதியளிப்பவர்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.

12.09 PM: சேவை வரி 14% ஆக அதிகரிப்பு.

12.08 PM: 2013-14 நிதியாண்டில் திரட்டப்பட்ட சொத்து வரி ரூ.1008 கோடி. வரும் நிதியாண்டில் சொத்து வரிக்கு பதிலாக ' சூப்பர்-ரிச் வரி' அமல் படுத்தப்படுகிறது. ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்க்ள் இந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும்.

12.06 PM: அயல்நாட்டுச் சொத்துகளுக்கான வருமான வரியை தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

12.05 PM: கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். | விரிவாக படிக்க -> கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு சிறை தண்டனை|

12.04 PM: வரி விபரம்: கார்ப்பரேட் வரி தற்போது 30% ஆக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும்.

11. 59 AM: 5 பெரிய மின் திட்டங்கள் அமைக்கப்படும். 2015-16 நிதியாண்டில் கூட்டங்குளம் இரண்டாவது அணு உலை செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

11. 58 AM: தற்போது நடைமுறையில் உள்ள தங்க சேமிப்பு மற்றும் தங்க உலோக கடன் திட்டங்களுக்கு மாற்றாக செல்லத்தக்க தங்கத் திட்டம்.

11. 57 AM: புதிதாக வர்த்தகம் தொடங்குபவருக்கு உதவி வழங்க “சேது” என்றழைக்கப்படும் சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயன்பாட்டு அமைப்பை ஏற்படுத்த யோசனை

11. 56 AM: தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்படும்.

11.55 AM: பட்ஜெட் மதிப்பீடு:

1.திட்டமிடப்படாத செலவினங்கள்- ரூ.13,12,200 கோடி

2.திட்டமிடப்பட்ட செலவினங்கள்- ரூ.4,65,277 கோடி

3.நடப்புப் பற்றாக்குறை- ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 3.9%

11.52 AM: மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு

11.51 AM: வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடனுதவி

11.50 AM: விவசய மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு

11. 49 AM:கல்வித் துறை: கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும்.

11.48 AM: கல்வித் துறை: ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப்பிரதேசத்தில் ஐ.ஐ.எம். அமைக்கப்படும். அருணாச்சலப்பிரதேசத்தில் (Centre for Film Production and Animation ) திரைப்படத் தயாரிப்பு, அனிமேஷன் சார்ந்த கல்வி மையம் அமைக்கப்படும்.

வாசிக்க ->நாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்

11.45 AM: ராணுவத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி ஒதுக்கீடு.

11.43 AM: கல்வித் துறைக்கு ரூ.68,968 கோடி ஒதுக்கீடு.

11.40 AM: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும்.

11.36 AM: தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும். பிஹாரில் எய்ம்ஸ்-க்கு நிகரான மையம் அமைக்கப்படும்.

11.35 AM: நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11.34 AM: 'அடல் இன்னோவேஷன் மிஷன்'( Atal Innovation Mission) என்ற பெயரில் நாட்டில் பல்வேறு துறைகளிலும் புதுமையை புகுத்தும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திட்டம் அமல் படுத்தப்படும்.

11.33 AM:மூத்த குடிமக்கள் நலனைப் பேண பி.எஃப் திட்டத்தில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.9000 கோடி நிதி பயன்படுத்தப்படும். 'மூத்த குடிமக்கள் சேமநல நிதி' என்ற பெயரில் இது நிர்வகிக்கப்படும்.

11.32 AM: கிராமப்புற உட்கட்டுமானத்தை மேம்படுத்தும் வகையில் 2015-16 நிதியாண்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும்.

11.31 AM: வறுமைக் கோட்டுக் கீழ் இருக்கும் முதியோர்கள் அடையாளம் காணப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

11.30 AM: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.1 பிரிமீயம் தொகை செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான காப்பீட்டை பெற முடியும்.

11.29 A.M. மத்திய அரசு விரைவில் தேசிய திறன் இயக்கத்தை துவக்க உள்ளது. | வாசிக்க - >இளைஞர்களுக்காக விரைவில் தேசிய திறன் இயக்கம் |

11.28 AM: ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம். ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே பிரிமீயம். | வாசிக்க - >ஏழைகளுக்கு ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு |

11.28 AM: நடப்பு கணக்கு பற்றாக்குறையை 3%-துக்கு கொண்டு வரும் இலக்கு இரண்டு ஆண்டுகளில் எட்டப்படும்.

11.27 AM: அரசு கொண்டுவரவுள்ள 2 சீர்திருத்தங்கள்:

1.ஏப்ரல் 1 2016 முதல் (ஜி.எஸ்.டி.) சரக்கு, சேவை வரி அமலுக்கு கொண்டு வரப்படும்.

2.நேரடி மானியத் திட்டத்தில் பயனாளர்கள் பலனடையும் வகையில் ஜன் தன் திட்டம், ஆதார் திட்டத்தை பயனாளர்கள் மொபைல் எண்ணுடன் ஒருங்கிணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

11.26 AM: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தப்படும். (MNREGA) தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.34,699 கோடி ஒதுக்கப்படுகிறது. | வாசிக்க - >100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.34,699 கோடி; சிறு தொழிலுக்கு முத்ரா வங்கிகள் அறிமுகம் |

11.25 AM:தொழில் முனைவோருக்கு சிறு, குறு அளவில் கடன் வழங்கும் வகையில் முத்ரா வங்கிகள் உருவாக்கப்படும். அதற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும்.

11.24 AM: விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நபார்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

11.23 AM: ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.

11.22 AM:அரசு எதிர் கொண்டுள்ள சவால்கள் | வாசிக்க ->மத்திய அரசின் ஐம்பெரும் சவால்கள்: ஜேட்லி தகவல் |

1.விவசாயத் துறை வருமானத்தை பெருக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது

2.கட்டுமானத் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்

3.உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் இதை ஈடுகட்டவே வகுக்கப்பட்டுள்ளது.

4.நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீரமைக்க வேண்டும்.

5. அதிக அளவில் நிதி முதலீட்டை ஈர்க்க கூடுதலான கவனம் செலுத்தப்படும்.

11.12 AM: வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும்.

11.11 AM: 2022-ல் அனைவருக்கும் வீடு திட்டம் இலக்கை எட்டும். கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும், நகர்ப்புறங்களில் 5 கோடி வீடுகளும் அமைக்கப்படும்.

11.10 AM: 2015-16 நிதி ஆண்டுக்கான ஜிடிபி இலக்கு 8 முதல் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு இலக்க ஜிடிபி அடைய வேண்டும் என்பதே எதிர்காலத் திட்டம்.

11.08 AM: அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

11.06 AM: அரசின் 3 சாதனைகள் |வாசிக்க -> மோடி அரசின் 3 சாதனைகள்: பட்ஜெட்டில் ஜேட்லி பட்டியல்|

1. ஜன் தன் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 12.5 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

2. நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள மாநிலங்கள் பயனடையும் வகையில் ஏல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

3. தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-15ல் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

11.05 AM: பொருளாதார வளர்ச்சியல் ஊக்குவிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.

11.04 AM: நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 1% கீழ் குறையும்: ஜேட்லி நம்பிக்கை.

11.04 AM: மொத்த பண வீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்துள்ளது.

11.03 AM: இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

11.01 AM: இந்தியப் பொருளாதரத்தின் நம்பகத்தனமை உலக அரங்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

11.00 AM: மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

10.43 AM: வர்த்தக துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 262.33 புள்ளிகள் உயர்ந்து 29,482.45 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 74.65 புள்ளிகள் உயர்ந்து 8,919.25 புள்ளிகளாக இருந்தது. | > பட்ஜெட் எதிர்பார்ப்பு: சென்செக்ஸ் 262 புள்ளிகள் அதிகரிப்பு |

10.42 AM: பட்ஜெட் எதிர்பார்ப்பு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இன்று காலை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

10.40 AM: வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா என்பது நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.