Published : 16 Feb 2014 02:50 PM
Last Updated : 16 Feb 2014 02:50 PM

நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்- பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் இருக்காது

அடுத்த இரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், இடைக்கால பொது பட்ஜெட்டை மத்திய அரசு இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்யவுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில் பெரிய அளவி லான அறிவிப்புகள் எதுவும் இருக்காது எனக் கூறப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்வதுடன், வரும் ஜூலை மாதம் வரையி லான அத்தியாவசிய செலவினங் களுக்கான அனுமதியை (வோட் ஆன் அக்கவுன்ட்) மத்திய அரசு கோரவுள்ளது.

இதுவரை தாக்கல் செய்யப் பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் களில் வரி விதிப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப் பட்டதில்லை. கொள்கை ரீதி யான புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டதில்லை. சாமானிய மக்களுக்கு சில சலுகைகள் அளிப்பது தொடர்பாக மட்டுமே அறிவிக்கப்படும்.

முன்னதாக சுங்க வரி விதிப்பு மற்றும் சேவை வரியில் சில மாற்றங்களை செய்யப் போவதாக ப.சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு பிற அரசியல் கட்சிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது என்பதால், அந்த முயற்சி கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட் தொடர் பாக ப.சிதம்பரம் கூறுகையில், “2004-ம் ஆண்டு ஜஸ்வந்த் சிங் 12 பக்கங்கள் கொண்ட இடைக்கால பட்ஜெட் உரையை ஆற்றினார்.

2009-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி 18 பக்கங்கள் பட்ஜெட் உரை வாசித்தார். நான் 12-க்கும், 18-க்கும் இடைப்பட்ட பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரையை ஆற்றவுள்ளேன்.

இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டம், சுங்க வரி போன்றவற்றில் சட்டத்திருத் தத்தை கொண்டு வர முடியாது. ஆனால், சட்டத்திருத்தம் தேவைப்படாத அளவுக்கு சிறிய மாற்றங்களை செய்து கொள்ளலாம்” என்றார்.

பெரும்பாலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான சாதனை விளக்க உரையாகவே பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை அரசு சமாளித்த விதம் பற்றி ப.சிதம்பரம் விளக்கம் அளிப்பார் எனக் கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x