Published : 06 Jan 2017 09:52 AM
Last Updated : 06 Jan 2017 09:52 AM
துபாயில் பணியாற்றி வரும் ஹைதராபாத் வாலிபர் ஒருவர் திருட்டு வழக்கில் சிக்கி உள்ளார். இவருக்கு அந்நாட்டு சட்டத்தின் படி ஓராண்டு சிறை தண்டனையும், 300 சவுக்கடியும் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மலக்பேட்டா பகுதியை சேர்ந்தவர் முகமது மன்சூர் ஹுசைன் (30). எம்.பி.ஏ படித்த இவர், ரியாத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி இவர், தான் பணியாற்றும் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 1.06 லட்சம் துபாய் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யச் சென்றார்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் வந்த மர்ம நபர்கள், இவரை வழிமறித்து பணத்தை கொள்ளை அடித்து சென்றனர் என ஹைதராபாத்தில் உள்ள முகமது மன்சூர் ஹுசைனின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே சம்பவம் குறித்து துபாய் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதனை விசாரணை நடத்திய நீதிமன்றம், மன்சூருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததோடு, 300 சவுக்கடியும் வழங்குமாறு தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து தற்போது மன்சூர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மன்சூரின் பெற்றோர், தனது மகன் தவறு செய் பவன் அல்ல என்றும், ஏற்கெனவே இது போன்று பலமுறை வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ளான் எனவும் தெரிவித் துள்ளனர். மேலும் இவர்கள், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் கடிதம் எழுதி உள்ளனர். தெலங்கானா முதல்வரிடமும் நேரடியாக சந்தித்து முறையிட்டுள்ளனர். எம்.ஐ.எம். கட்சி எம்.பி. அசாதுத்தீன் ஓவைசியும் நடவடிக்கை எடுக்கும்படி சுஷ்மாவிடம் கோரி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT