Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM

வடகிழக்கு மக்களை பாதுகாக்க வழிகாட்டி விதிகள்- மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இனவெறி தாக்குதல்களில் இருந்து வடகிழக்கு மக்களை பாதுகாக்க உரிய வழிகாட்டு விதிகளை வகுக்க கோரி தொடரப் பட்ட வழக்கில், மத்திய அரசுக்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான பொதுநல வழக்கு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதேபோன்ற வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசா ரணையில் இருப்பதால் மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் தயங்கினர்.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி, “டெல்லியில் நடந்த சம்பவத்தை மட்டுமே உயர் நீதிமன்றம் விசா ரித்து வருகிறது. ஆனால் நாடு முழுவதும் இனப் பாகுபாடு காணப்படுவதால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக் கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த மனு 7 வழக்கறிஞர்கள் சார்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இவர்களில் சிலர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தெற்கு டெல்லியில் கடைக்காரர்கள் சிலரால் மாணவர் நிடோ டானியா தாக்கப்பட்டது முதல், சமீப காலத்தில் வடகிழக்கு மாநிலத்தவர் மீதான பல்வேறு தாக்குதல் சம்பவங்களை மனுதாரகள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடகிழக்கு மக்களை பாதுகாக்க மத்திய உள் துறை அமைச்சகம் சார்பில் எந்த நடைமுறையும் வகுக்கப் படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x