Published : 19 Nov 2013 08:56 AM
Last Updated : 19 Nov 2013 08:56 AM
சத்தீஸ்கரில் 2- ஆம் கட்டத் தேர்தல் தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெறும், 19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பாதுகாப்புப் பணியில் போலீசார், துணை ராணுவப் படையினர், என 1 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். களத்தில் 843 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 75 பேர் பெண் வேட்பாளர்களாவர்.
சத்தீஸ்கரில், 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க ராமன்சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு முனைப்புடன் உள்ளது.
இன்றைய தேர்தலில், சத்தீஸ்கர் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் உள்பட 9 அமைச்சர்கள் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார், ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 11- ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. 67 சதவீத வாக்குகள் பதிவாகின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT