Published : 05 Oct 2014 11:24 AM
Last Updated : 05 Oct 2014 11:24 AM
பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்ற பாடகர் கே.ஜே.யேசுதாஸின் கருத்துக்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவரின் பேச்சுக்கு பெண்கள் இயக்கத்தினர் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நடை பெற்ற காந்தி ஜெயந்தி விழா ஒன்றில் பேசிய பாடகர் யேசு தாஸ், “ஜீன்ஸ் அணிந்து மற்றவர்களுக்கு பெண்கள் இடையூறு செய்யக் கூடாது. உடலின் முக்கிய பாகங்களை மூடும் வகையில் ஆடை அணிய வேண்டும். ஜீன்ஸ் பேண்ட் அணிவது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது. அடக்கமும், பணிவும்தான் பெண்களின் மிக உயர்ந்த குணம்” என்றார். அவரின் இப்பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறும் போது, “இதுபோன்ற மோசமான விமர்சனத்தை பிரபல பாடகர் ஒருவர் தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது நன்னெறிக்குப் புறம்பான பேச்சு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT