Published : 12 Oct 2014 01:36 PM
Last Updated : 12 Oct 2014 01:36 PM
பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து புகழ்ந்து வருவதால் சசி தரூர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது காங்கிரஸ் கட்சி. இது தொடர்பாக கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி, அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியிடம் அறிக்கை ஒன்றை அளித்திருப்பதாக, கேரள காங்கிரஸ் கூறியுள்ளது.
'தூய்மையான இந்தியா' திட்டம் உள்ளிட்ட பிரதமர் மோடியின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார் காங்கிரஸ்காரரான சசி தரூர். இதனால் அதிருப்தியடைந்த அவரது கட்சியினர் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் மேலிடத்தை அணுகியிருக் கிறார்கள்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஒருவரான மோதிலால் வோராவிடம் கேட்டதற்கு, தாங்கள் இன்னும் எந்த ஓர் அறிக்கையையும் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
கேரள காங்கிரஸ் நிர்வாகி களிடமிருந்து அறிக்கை வந்தவுடன் சசி தரூர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதை மோதிலால் வோரா, ஏ.கே.அந்தோனி மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரடங்கிய மூன்று பேர் குழு பரிசீலிக்கும் என்று கருதப்படுகிறது. பிரதமரைப் பாராட்டினாலும், தான் பா.ஜ.க. நோக்கி நகரவில்லை என்றும், பா.ஜ.க.வின் இந்துத்வா கொள்கையோடு தனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தை சசி தரூர் முன் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT