Published : 23 Mar 2014 12:14 PM
Last Updated : 23 Mar 2014 12:14 PM
டெல்லி மாநில மதச்சார்பற்ற ஜனதா தள பிரிவு ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்துள்ளது.
இதன் மாநிலத் தலைவரும், அகில இந்திய முஸ்லிம் ஒற்றுமை இயக்கத்தின் தலைவரு மான ஹாஜி இக்ராம் ஹசணுடன் நூற்றுக்கணக்கான தொண்டர் களும் சனிக்கிழமை ஆம் ஆத்மி யில் இணைந்தனர். இவர்கள் அனைவருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தொப்பிகளை அணி வித்து தேசிய செயற்குழு உறுப்பினர் களான திலீப் பாண்டே பேராசிரியர் ஆனந்த் சர்மா ஆகியோர் வரவேற்ற னர். இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் டெல்லி மாநில துணைத் தலைவர்களான ஹாஜி முகம்மது யாமின் மற்றும் அப்சால் சித்திக்கீ, செயலாளரான சாஹிபா நக்வி, செய்தித் தொடர்பாளராக இருந்த ஷபீக் முகம்மது ஆகியோரும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் அட்டையைப் பெற்றனர்.
இவர்களுடன் வடகிழக்கு டெல்லி தொகுதியின் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களும் ஆம் ஆத்மியில் இணைந்தனர்.
இக்கட்சியின் தேசிய அமைப் பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலின் செயல்பாடுகளால் கவரப்பட்டு கட்சியில் இணைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT