Published : 18 Apr 2014 10:31 AM
Last Updated : 18 Apr 2014 10:31 AM
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் சமூக ஆர்வலருமான கிரண் பேடியை டெல்லி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் டாக்டர் ஹர்ஷவர்தனை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. இந்நிலையில் அவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வைத்து விட்டது. டெல்லி முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருந்த விஜய்கோயலும் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு விட்டார்.
இந்நிலையில் பாஜகவின் டெல்லி நிர்வாக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறுகையில், “அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்க்க கிரண்பேடியே சரியான நபர் என்று கட்சி கருதுகிறது. இதற்கு முன் டெல்லி முதல்வர் வேட்பாளர் மற்றும் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் வாய்ப்பை எங்கள் கட்சி வழங்கியபோது கிரண்பேடி மறுத்துவிட்டார். இந்நிலையில் டெல்லி முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அவரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
கிரண் பேடியும் இதை மனதில் வைத்துதான் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார் என பாஜகவினர் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT