Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM
குழந்தை இலக்கியங்களை வளர்க்க நூலாசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும் அரசாங்கம் தங்களால் இயன்றவரை பாடுபடவேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியதாவது:
இந்தியாவின் வரலாறும், பாரம்பரியங்களும் விவாதிக்கும் ஆர்வமுள்ள இந்தியர்களால் எப்போதும் கொண்டாடப்படுகிறது. சகிப்புத்தன்மையற்ற இந்தியர்களால் அல்ல. பல்வேறு மொழிகள் கொண்ட, மத சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் குறிக்கோள்களை காக்க மக்கள் தங்களால் இயன்ற அனைத்தையும்செய்யவேண்டும்.
அரசமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். சகிப்புத் தன்மையின்மை, காழ்ப்புணர்வு, வெறுப்பு ஆகியவற்றை நிராகரிப்பதில் நாம் சமரசம் செய்துகொள்ளக்கூடாது.
நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு கருத்துகள், எண்ணங்கள், தத்துவங்கள் அமைதியுடன் ஒன்றுக்கொண்டு போட்டியிட்டு வருகின்றன. அரசமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மிக முக்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும் என்றார் பிரணாப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT