Published : 09 Jun 2016 08:45 AM
Last Updated : 09 Jun 2016 08:45 AM
ஆந்திர மாநிலத்தின் புதிய தலை நகராக உருவாகி வரும் அமராவதி யில் ‘அணு உலை’ கட்டப்படுவ தாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு ஆந்திரா வில் கண்டனம் எழுந்துள்ளது.
விஜயவாடா - குண்டூர் இடையே சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் அமைய உள்ளது. ஆனால் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு அணு உலை அமைப்பதாக பாகிஸ்தான் ஊட கங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை இரவு பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில், இதுகுறித்து தீவிர விவாதமே நடந்தது.
அமராவதியில் தற்போது சட்டப் பேரவை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை பிரபல அமெரிக்க வடிவமைப் பாளர் மக்கி உட்தா மற்றும் அவரது உதவியாளர்கள் வடிவமைத் திருந்தனர். முதலில் அணு உலை போன்ற ஒரு வடிவமைப்பு பரிசீலிக் கப்பட்டது. அதை முதல்வர் சந்திரபாபு நாயுடு நிராகரித்துவிட் டார். மீண்டும் வேறு புதிய வடிவத்தில் கட்டப்பட்டு வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் ஊடகங் கள், ஹைட்ரஜன் வெடிகுண்டு களை தயாரிக்கும் அணுஉலை ஆந்திராவில் உருவாக்கப் படுவதாகவும், இதற்கு அமெரிக்கா உதவி செய்தவதாகவும் தவறாக செய்திகளை வெளியிட்டன. இதனை ஆந்திராவை சேர்ந்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT