Published : 25 Apr 2017 09:25 AM
Last Updated : 25 Apr 2017 09:25 AM
அட்சய திருதியை நாளில் பக்தர்கள் தங்கம், வெள்ளி நகைகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், அவர்களது வசதிக்காக ஏழுமலையான் டாலர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமையில் நேற்று உயர்நிலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பேசிய சாம்பசிவ ராவ், ‘‘வரும் 29-ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ளது. இதை யொட்டி திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையான் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி டாலர்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். எனவே டாலர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
மேலும் கோடை வெயிலுக்கு இதமாக தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தண்ணீர் பந்தல் அமைக்கும்படியும் அதிகாரி களைக் கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT