Published : 20 Oct 2014 10:16 AM
Last Updated : 20 Oct 2014 10:16 AM
மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர் என்று மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை கருத்து கூறியுள்ளது.
பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்து கூறியுள்ள காங்கிரஸ் தலைமை, இம்மாநிலங்களில் அரசு அமைக்கும் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புவதாக கூறியுள்ளது.
இதுகுறித்து சோனியாகாந்தி விடுத்துள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது. இம்மாநிலங்களில் ஆக்கப்பூர்வமாகவும், விழிப்புட னும் செயல்பட உறுதி ஏற்கி றோம்.
எங்கள் மீது நம்பிக்கை கொண்டு மகாராஷ்டிர மக்கள் தொடர்ந்து 3 முறையும் ஹரியாணா மக்கள் தொடர்ந்து 2 முறையும் எங்களுக்கு வாக்களித்தனர். இங்கு ஆட்சி அமைக்கும் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள அறிக்கையில், “மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். மகாராஷ்டிரம் மற்றும் ஹரியா ணாவில் எங்களின், முறையே 15 மற்றும் 10 ஆண்டுகால ஆட்சிக் குப் பின் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர்.
பாஜக வெற்றிக்கு எனது வாழ்த் துகள். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற காங்கிரஸ் கடுமையாக உழைக்கும்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறு ம்போது, “தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் ஆராயும்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT