Last Updated : 13 Mar, 2015 03:23 PM

 

Published : 13 Mar 2015 03:23 PM
Last Updated : 13 Mar 2015 03:23 PM

லக்வி விடுதலை: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்ட லக்வி விடுதலை செய்யப்பட்டதற்கு, பாகிஸ்தானை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது,

லக்வியை சுதந்திரமாக நடமாடாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, "லக்விக்கு எதிரான ஆதாரங்களை பாகிஸ்தான் உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை.

தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற எந்த பாடுபாடும் இல்லை. சட்ட ரீதியான நடவடிக்கையை ஒழுங்குபடுத்த தவறிய நிலையில், லக்வி விடுதலையாகி வெளிவராமல் இருக்க வேண்டும். இது முற்றிலும் பாகிஸ்தான் அரசின் பொறுப்பு" என்று தெரிவித்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் இந்திய தூதர் அப்துல் பாசிதை நேரில் அழைத்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை தடுப்புக் காவலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக லக்வி செயல்பட்டதற்கான சரியான சாட்சியம் இல்லாததால் அவரை தடுப்பு காவல் தடை சட்டத்தில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், அவரது விடுதலையை உடனடியாக அமல்படுத்தவும் அறிவிறுத்தியுள்ளது.

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 11 தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், தாஜ்மஹால் நட்சத்திர ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 154 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x