Published : 03 Mar 2017 10:40 AM
Last Updated : 03 Mar 2017 10:40 AM
ஆந்திர மாநிலத்தின் புதிய சட்டப் பேரவை கட்டிடம் அமராவதியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு இதனை திறந்துவைத்தார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத் தில் இருந்து புதிதாக தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு தலைநகர் ஹைதராபாத், தெலங் கானா வசம் சென்றது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா குண்டூர் இடையே அமராவதி என்ற பெயரில் புதிய தலைநகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமராவதியில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேசும் போது, “விவசாய நிலத்தின் மீது கட்டப்பட்ட இந்த சட்டப்பேரவையில் தீர்மானிக்கப்படும் மசோதாக்களே இனி சட்டங்களாக மாறவுள்ளதை நினைக்கும்போது ஒருபுறம் மகிழ்ச்சி யாகவும், மறுபுறம் வேதனையாகவும் உள்ளது. கட்டிய துணியோடு சொந்த இடத்தில் இருந்து துரத்தியடிக்கப் பட்டோம். கையில் போதுமான பணமும் இல்லாத நிலையில், துணி வோடு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி தற்போது சொந்த இடத்தில் புதிய சட்டப்பேரவை 192 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தலைநகராக கொண்டோம். பின்னர் கர்னூலை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந் தோம். இதையடுத்து ஹைதராபாத் தில் நிலைகொண்டு 58 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். ஆனால் அதுவும் நிரந்தரமின்றி காங்கிரஸால் அங் கிருந்து துரத்தப்பட்டோம். ஆனால் தற்போது சொந்த இடத்தில் சட்டப் பேரவை, தலைமைச்செயலகம் கட்டி யுள்ளோம். இது தற்காலிக சட்டப்பேரவை மட்டுமே. விரைவில் நாடே அதிசயிக்கும் சட்டப்பேரவை கட்டப்படும்” என்றார்.
விழாவில் சபாநாயகர் கோடல சிவப்பிரசாத், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண் டனர். முன்னதாக பேரவையை முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வை யிட்டார். இதில் மைக்குகள் உடைக்க முடியாத வகையில் அமைக்கப்பட் டுள்ளது. மேலும் சபாநாயகரை எதிர்கட்சியினர் நெருங்க முடியாத வகையில் அவரது இருக்கை அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT