Last Updated : 30 Oct, 2014 07:58 PM

 

Published : 30 Oct 2014 07:58 PM
Last Updated : 30 Oct 2014 07:58 PM

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு: மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு

போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறும்போது, “கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், வழக்கறிஞர் மூலம் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.

5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாகவும், அதிகாரபூர்வமாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.

நவம்பர் 2011ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தியதாக பிரசாத், அகஸ்டஸ், வில்சன், எமர்சன், லாங்லட் என்ற 5 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேபோல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இவர்கள் 8 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x