Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM
டெல்லியில் புதன்கிழமை நடை பெற்ற சட்டசபை தேர்தலில் மாலை 5.00 மணி வரை 66 சத விகித வாக்குகள் பதிவாகின. எனினும், ஏராளமானோர் வாக்குப் பதிவு முடியும் நேரமான 5 மணிக்குப் பிறகும் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் வாக்குப்பதிவு இரவு வரை நீடித்தது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
காலை எட்டு மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியபோதிலும், குளிர் காரணமாக மந்தமாக இருந்தது. காலை 10.10-க்கு பத்து சதவிகித வாக்குகளும், 11.00 மணிக்கு 17 சதவிகித வாக்குகளும் பதிவாகின. மதியம் 1.00 மணிக்கு 34 சதவிகிதமானது.
மதியம் 3.00 மணிக்கு 48 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி விஜய்தேவ் கூறுகையில், ‘டெல்லியைப் பொறுத்துவரை இது ஒரு நல்ல உயர்வு. இது 70 முதல் 75 சதவிகிதம் வரை உயரும்’ என நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு 55 சதவிகிதமாக அதிகரித்தது. இதற்கிடையே, துக்ளக்காபாத், கரோல் பாக், திரிலோக்புரி மற்றும் பதர்பூர் ஆகிய பகுதிகளின் சில வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது. இதை
யடுத்து பழுதடைந்த 112 இயந்திரங்களுக்கு பதில் புதிய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல், புதுடெல்லி தொகுதியின் காளி பந்தி மார்க் வாக்குச்சாவடியில் சுமார் 7 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்
கள் விடுப்பட்டிருந்தன. இது குறித்து, வாக்காளர் ஒருவர் கூறுகையில், ‘ஒருபக்கம் எங்களை வாக்களிக்கும்படி கோரிக்கை விடுகிறார்கள். அதற்காக தேர்தல் அடையாள அட்டையுடன் சென்றாலும் பட்டி யலில் பெயர் இல்லை எனக்கூறி அனுமதிக்க மறுக்கிறார்கள்’ என சலித்துக் கொண்டார்.
இங்கு கடந்தமுறை வாக்க ளித்த பலரும் இந்த முறை வாக்க ளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இங்குள்ள ஒய்.எம்.சி.ஏ. பணியாளர்கள் குடியிருப்பைச் சேர்ந்த பலரும் வாக்களிக்க அனுமதிக்கப் படவில்லை.
இதில், முக்கிய விஐபி தொகு தியான புது டெல்லியில் வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இங்கு மதியம் 2 மணி வரை 46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலையில் அதன் மொத்த வாக்குப் பதிவு 74 சதவிகிதமாக இருந்தது.
இந்தத் தொகுதியில் முதல்வர் ஷீலா தீட்சித், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் விஜயேந்தர் குப்தா மற்றும் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் கெஜ்ரிவால் ஆகிய மூன்று முக்கிய வேட்பாளர்களுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவியது.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஆர்.கே.புரம் தொகுதி யில் மிக அதிகமாக வாக்குப் பதிவு 80 சதவிகிதத்தைத் தாண்டி யது. இதற்கு அடுத்தபடியாக கிரேட்டர் கைலாஷில் 79.74 சதவிகிதமும், முஸ்லீம் வாக்க ளர்கள் அதிகம் கொண்ட ஒக்லா வில் 55 சதவிகிதமும் பதிவானது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு 810 பேர் போட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1.19 கோடி ஆகும். பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT