Published : 29 Jun 2017 10:08 AM
Last Updated : 29 Jun 2017 10:08 AM
மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் ஜூலை 7-ம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் திவ்ய தரிசன முறையை ரத்து செய்யப் போவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக பாத யாத்திரையாக சென்று திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். அவர்கள் திவ்ய தரிசனம் மூலம் விரைவாக ஏழுமலையானை தரிசிக்கவும் அனுமதிக்கப்பட்டு வந்தது. அத் துடன் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டு பிரசாதமும் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த இலவச லட்டு விநியோகத்தால் நாளொன்றுக்கு ரூ.10.5 லட்சம் வரை தேவஸ்தானத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படு கிறது. மேலும் வார இறுதி நாட் களில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் நேரடியாக மலைப் பாதை வழியாக நடந்து வந்து ஏழுமலையானை தரிசிப்ப தால் கூட்டமும் அதிகரிக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மலைப் பாதை வழியாக வரும் பக்தர் களின் திவ்ய தரிசனத்தை ரத்து செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள் ளது. அதன்படி இந்த புதிய முறை வரும் ஜூலை 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தேவஸ் தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு நேற்று தெரிவித் தார். இந்த அதிரடி அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் அதிருப்தி தெரிவித் துள்ளனர். விஐபி பக்தர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கவே தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT