Published : 30 Oct 2014 04:08 PM
Last Updated : 30 Oct 2014 04:08 PM
மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி நிதி முறைகேடுகள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் உட்பட 42 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர் சிவாஜி பாஹிங்கர், அஜித் பவார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மாநில கூட்டுறவு வங்கிக்கு ரூ.1,595 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அஜித் பவர் உள்ளிட்டோர் இயக்குனர்களாக இருந்தனர்.
2012-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் எதிர்மறை நிகர மதிப்பு மிக அதிகமாக இருந்ததாக ரிசர்வ் வங்கி எச்சரித்ததையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மானிக் ராவ் பாட்டீல் தலைமையிலான இயக்குனர்கள் குழு நீக்கப்பட்டனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவிர காங்கிரஸ் கட்சி, சிவசேனா, மற்றும் பாஜக கட்சியினருக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் மாநில கூட்டுறவு ஆணையர் தினேஷ் ஆல்கர் அளித்த அறிக்கையில் இவர்கள் இயக்குனர்களாக இருந்த போது எடுத்த சில முடிவுகளினால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர்கள் 6 ஆண்டுகளுக்கு கூட்டுறவுத் துறை தேர்தல்களில் போட்டியிட முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT