Published : 24 Aug 2016 07:56 AM
Last Updated : 24 Aug 2016 07:56 AM

ஆந்திர அரசு சார்பில் பி.வி சிந்துவுக்கு வீடு, ரூ.3 கோடி பரிசு: அரசு துறையில் விரும்பிய உயர் பதவி வழங்கப்படும் என உறுதியளிப்பு

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி சிந்துவுக் கும் அவரது பயிற்சியாளர் கோபிசந்துக்கும் நேற்று விஜய வாடாவில் ஆந்திர அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவருக்கு ஆந்திர அரசு சார்பில் ரூ.3 கோடி பரிசுத் தொகை, 1,000 சதுர அடியில் வீட்டுமனை பட்டா மற்றும் சிந்து விருப்பப்படும் அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி சிந்துவுக்கு தெலங் கானா அரசும், ஆந்திர அரசும் போட்டி போட்டு பரிசுகளை அறிவித் தன. நேற்று முன் தினம் தெலங்கானா அரசு சார்பில் சிந்துவுக்கு ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் 1,000 சதுர அடியில் ஹைதராபாத்தில் வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று விஜயவாடாவில் சிந்துவுக்கு ஆந்திர அரசு பாராட்டு விழா நடத்தி யது. விழாவில் அவருக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி பரிசுத் தொகையும், 1,000 சதுர அடியில் அமராவதியில் வீட்டு மனைப் பட் டாவும் வழங்கப்பட்டது. மேலும் ஆந்திர அரசில் சிந்து விரும்பும் எந்த உயர் வேலையும் வழங்கப் படும் என அரசு சார்பில் உறுதி கொடுக்கப்பட்டது. பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, "சிந்து நாட்டுக்கே விடிவெள்ளி. ரியோ ஒலிம்பிக்கில் நமது நாட்டு வீரர்கள் எந்த பதக்கமும் பெறாமலேயே திரும்புவார்கள் என எண்ணும் சமயத்தில் சிந்து நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார்.

சிந்துவை உலக தர விளையாட்டு வீராங்கனையாக உயர்த்திய அவரது பயிற்சியாளர் கோபிசந்த், அவரது பெற்றோர் ஆகியோரது ஊக்கம், ஆதரவு மிகவும் முக்கி யமானது. பிள்ளைகளை விளை யாட்டில் பெற்றோர், அரசு சரியாக ஊக்குவிக்காததால்தான் நாம் சர்வ தேச விளையாட்டு போட்டிகளில் மிகவும் பின்தங்கி உள்ளோம். ஆதலால் ஆந்திராவில் விளை யாட்டு பயிற்சி இலவசமாக கற்பிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

சிந்து பேசும்போது, "எனக்கு இவ்வளவு ஆதரவை வழங்கும் மக்களை பார்க்கும்போது மீண்டும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் எனும் ஆர்வம் தலைதூக்குகிறது. உங்களை போன்றவர்களின் ஊக்கத்தால் நான் மீண்டும் சாதிப்பேன். நான் பதக்கம் வெல்ல எனது குருநாதர் கோபிசந்த், பெற்றோர்களின் ஊக்கமே முக்கிய காரணம்" என்றார்.

முன்னதாக விழா மேடையில் சிந்துவுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறிது நேரம் பாட்மிண்டன் விளையாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x