Published : 15 Aug 2016 02:44 PM
Last Updated : 15 Aug 2016 02:44 PM
குஜராத் மாநிலம் உனாவில் தலித்துகள், சமூக ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு சுதந்திர தினம் கொண்டாடினார்கள். ஹைதாராபாத் மத்திய பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலாவின் தாயார் தேசியக் கொடி ஏற்றினார்.
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம், உனா நகரை அடுத்த சமாதியாலா கிராமத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி இறந்த பசுவின் தோலை உரித்ததாகக் கூறி 7 தலித்கள் மீது பசு பாதுகாப்பு குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அம்மாநிலத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, தலித்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்து அகமதாபாத் நகரிலி ருந்து உனா நகரை நோக்கி 10 நாள் யாத்திரையை கடந்த 4-ம் தேதி தொடங்கினர். இவர்கள், சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உனா நகரை நேற்று வந்தடைந்தனர்.
பின்னர் அங்குள்ள ஒரு பள்ளிக் கூட வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஹைதரா பாத் பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா தேசியக் கொடியை ஏற்றினார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உனா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை பாலு சர்வையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலித்கள் மற்றும் சமூக ஆர்வலர் கள் உள்ளிட்டோர் பாபா சாஹிப் அம்பேத்கரின் புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை ஏந்தியபடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இவ்விழாவின் ஒருங்கிணைப் பாளர் ஜிக்னேஷ் மெவானி (35) பேசும்போது, “இறந்த விலங்கு களின் தோலை உரிப்பதையும் கையால் மலம் அள்ளுவதையும் தலித்கள் நிறுத்திக் கொள்வார் கள். மாறாக ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் வாழ்வாதாரத்துக் காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
தலித் அஸ்மிதா யாத்ரா என்ற பெயரில் கடந்த ஜூலை 31-ம் தேதி அகமதாபாத்தில் தலித்துகள் யாத்திரை ஒன்றை தொடங்கினர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களும், தலித்துகள் தாக்கப்படுவதை எதிர்த்து இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.
இந்த யாத்திரையில் கலந்து கொண்ட வஜாலி சவுகான் (55), இது புதியதொரு துவக்கம். இப்படி ஒரு நாள் எங்கள் வாழ்நாளில் காண்பேன் என நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்றார்.
மற்றொரு பங்கேற்பாளர் ஜீவாமாய் வங்கார், "நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நடந்தது எல்லாம் போதும். அநீதிக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்புவோம். வன்முறையை பாகுபாட்டை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்றார்.
யாத்திரையில் ஈடுபட்ட தலித்துகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. சில இடங்களில் கல் வீச்சு சம்பவத்துக்கு உள்ளாக நேர்ந்தது. கடுமையான விமர்சனங்களையும், சில தாக்குதல்களையும் கடந்து உனாவில் பேரணி நிறைவுற்றிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT