Published : 03 Jun 2016 07:28 AM
Last Updated : 03 Jun 2016 07:28 AM

கோடை விடுமுறையில் 25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

இந்த ஆண்டு கோடை விடுமுறை யில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக் தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தானம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோடை விடுமுறையில் வழக்கத் தைவிட அதிக அளவிலான பக்தர் கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். அந்த வகை யில் கடந்த 40 நாட்களில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசித்து உள்ளனர்.

அதிகபட்சமாக கடந்த மே 29-ம் தேதி 1,03,348 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கோடை விடுமுறையில் மொத்தம் 60,50,484 பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மேலும் 14,51,968 பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 97,24,718 லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

லஞ்ச ஒழிப்பு, கோயில் வளாகம், உடைமைகள் பாதுகாக்கும் இடம், லட்டு விநியோகம், க்யூ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் 18,529 வாரி சேவகர்கள் பக்தர்களுக்கு இலவச சேவையை செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x