Published : 15 Oct 2014 10:27 AM
Last Updated : 15 Oct 2014 10:27 AM
மத்திய பொதுப்பணியாளர் தேர்வா ணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்திய அரசு நிர்வாகத்தில் மதிப்பு மிக்க பணிகளாகக் கருதப்படும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு குடிமைப் பணித் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, பிரதான எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 602 பேர் தேர்வெழுதினர்.
இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதேசமயம், தேர்வு எழுதியவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் மதிப்பெண் விவரத் தைப் பெற விண்ணப்பிக்க வேண் டாம் என தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2014-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு, மதிப்பெண்கள், கட்-ஆப் மதிப்பெண்கள், விடைக் குறிப்புகள் ஆகியவை தேர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக முடிவடைந்த பிறகே அதாவது தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட எவ்வகையிலும் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் விவரத்தைக் கோர வேண்டாம். அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் நடைபெறவுள்ள பிரதான எழுத்துத் தேர்வுக்கு விரிவான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT