Published : 11 Oct 2014 10:26 AM
Last Updated : 11 Oct 2014 10:26 AM
எல்லையில் இந்திய ராணுவத்தின் பதிலடியைத் தாங்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை குறைத்துக் கொண்டுள்ளது.
காஷ்மீர் எல்லையில் கடந்த 9 நாட்களாக இந்திய ராணுவ நிலைகள், கிராமங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி வருகிறது.
நேற்று முன்தினம் ஜம்மு பிராந் தியத்தில் சுமார் 60 எல்லைச் சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கு தல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக் கப்பட்டது.
இந்திய தாக்குதலை பாகிஸ் தானால் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. இதனால் நேற்று ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ்தான் ராணுவம் அமைதி காத்தது. எனினும் கதுவா மாவட்டத்தில் 4 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை செய்தித் தொடர் பாளர் கூறியபோது, ஜம்மு, சம்பா மாவட்ட எல்லைகளில் அமைதி நிலவுகிறது, இருப்பினும் கதுவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் பாகிஸ்தான் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டது, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் உயிரிழப்போ, பொருள் சேதமோ இல்லை என்று தெரிவித் தார். எல்லையில் நீடிக்கும் சண்டை யால் இந்தியத் தரப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் காயமடைந்துள்ளனர். 113 கிராமங்கள் காலி செய்யப்பட்டு சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்ய திடீர் தாக்குதல்களை நடத்தி வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரோந்து பணி அதிகரிப்பு
பாதுகாப்புப் பணிகள் குறித்து எல்லை பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. அமித் லோதா கூறியபோது, ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
பதுங்கு குழிகள் அமைப்பு
பாகிஸ்தான் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க எல்லையோர இந்திய கிராம மக்கள், பதுங்கு குழிகளை அமைத்துள்ளனர். ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இரவில் வீடுகளில் தங்காமல் இந்த பதுங்கு குழிகளில்தான் தூங்குகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT