Published : 07 Jan 2014 09:30 AM
Last Updated : 07 Jan 2014 09:30 AM
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரவின்பேரில் இளம் பெண் வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு அறிவித்த கமிஷனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த விசாரணையை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் இன்னும் கிடைக்கவில்லை.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட் பாளருமான நரேந்திர மோடி உத்தரவின்பேரில் ஒரு இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அண் மையில் புகார் எழுந்தது. இதற்கு மோடியின் அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்த அமித்ஷா துணை போனதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
கர்நாடகம், இமாசலப் பிரதே சம், மகாராஷ்டிரம், டெல்லி ஆகிய மாநிலங்களில் அந்த இளம்பெண் தங்கியிருந்தபோது குஜராத் போலீஸார் அவரை வேவு பார்த்ததாகவும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
பிற மாநிலங்களில் குறிப் பிட்ட நபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் முறையான அனுமதியின்றி பல்வேறு மாநிலங்களில் குஜராத் போலீஸார் வேவு பார்த்துள்ளனர்.
இதுகுறித்து முழுமையாக விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம்
26-ம் தேதி அறிவித்தது. இந்த கமிஷன் மூன்று மாதங்களில் விசாரித்து முடிவுகளை அறிவிக் கும் என உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்தார்
கமிஷன் அமைப்பது தொடர் பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய சட்டத்துறைக்கு பரிந்துரை செய் யப்பட்டது. இதன்பேரில் அந்தக் கமிஷனுக்காக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் குழுவை சட்டத் துறை நியமனம் செய்துள் ளது. ஆனால் கமிஷனின் தலைவர் பொறுப்பேற்க ஓய்வு பெற்ற நீதிபதி இன்னும் நியமிக் கப்படவில்லை. இதனால், அந்த கமிஷனை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சக வட்டாரம் தி இந்துவிடம் கூறியபோது, ‘இந்த கமிஷனை தலைமை ஏற்று விசாரிப்பதற்காக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவரை பரிந்துரைக்குமாறு எங்களிடம் கேட்கப்பட்டது. இதற்காக, நாம் ஐந்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு எழுதிக் கேட்டு விட்டோம். ஏதோ சில காரணங் கள் கூறி அவர்கள் தவிர்த்து விட்டனர். எனினும், எங்கள் முயற்சி தொடர்கிறது’ எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து டெல்லியின் அரசியல் வட்டாரத்தில் கூறியதா வது: மூன்று மாதங்களில் கமிஷன் தனது அறிக்கையை அளிக்கும் என அறிவிக்கப்பட்டாலும், அந்த கமிஷன் அமைக்கப்பட்டு அதன்பின் அனுப்பப்படும் நோட்டீசுகளுக்கு பதில் கொடுக்கவே தாமதமாகிவிடும். இது காங்கிரஸுக்கும் தெரியும். எனினும் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் எப்படி பிரதமராக முடியும் என்ற வாதத்தை தனது பிரச்சாரங்களில் காங்கிரஸ் முன் வைக்கும்.
காங்கிரஸுக்கு சாதகமாக கமிஷனின் சார்பில் இடைக்கால அறிக்கை வெளியிடப்படும். இதற்கு ஏதுவாக ஒரு சாதகமான தலைவரை நியமிக்க முயல்வ தால்தான் கமிஷனுக்கு நீதிபதி கிடைக்காமல் உள்ளனர்.
வழக்கமாக இதுபோன்ற கமிஷன் களுக்கு தலைவரை நியமிக்கும் பொறுப்பு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் சட்டத் துறை அளித்துவிடும். தற்போது அரசியல் காரணங்களுக்காக அதை சட்ட அமைச்சகமே தன் நேரடி பொறுப்பில் தேடி வருவதி லேயே அதற்கான காரணம் எளிதாகப் புரிந்து விடும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT