Published : 24 Jan 2017 02:17 PM
Last Updated : 24 Jan 2017 02:17 PM
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தாரில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து வரும் பெலா பாட்டியா என்ற சமூக செயல்பாட்டாளருக்கு அப்பகுதியில் இருக்கும் மாவோயிஸ்ட் எதிர்ப்பு சுய ஒழுங்குக் குழு கடும் மிரட்டல்கள் விடுத்து வருகிறது.
பெலா பாட்டியா பஸ்தாரில் 2015 முதல் வசித்து வருகிறார், மனித உரிமை மீறல்கள், ஆதிவாசி உரிமைகள் குறித்து இவர் அதிகம் பேசி வருகிறார். இந்நிலையில் இவர் ‘மாவோயிஸ்ட்களின் கையாள்’ என்று சுய ஒழுங்குக் குழுவினர் அவரை அங்கிருந்து காலி செய்யுமாறு மிரட்டல் விடுத்து வருகிறது.
இதனையடுத்து பாட்டியா இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை துணை ஆய்வாளர் கிருபால் சிங் கவுதம் தலைமையில் 15 போலீஸ்கள் பாட்டியா வீட்டுக்கு காவல் காத்து வருகின்றனர்.
பஸ்தார் பர்ப்பா என்ற கிராமத்தில் வசித்து வரும் பேலா பாட்டியாவின் வீட்டுக்குள் திங்களன்று புகுந்து ஆர்பாட்டம் செய்தனர். “வீட்டுக்குள் புகுந்து என்னை உடனடியாக அந்த இடத்தை விட்டு போகுமாறு அச்சுறுத்தினர், இல்லையெனில் இடத்தை எரித்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். ஆனால் உடையை மாற்றிக் கொண்டு கிளம்பி விடுகிறேன் என்று அவர்களை ஒருவழியாக சமாதானம் செய்தேன்.
மேலும் என் வீட்டு உரிமையாளரையும் அவர்கள் மிரட்டினர். நேற்று என்னுடைய வீட்டு உரிமையாளரும் அவரது மகனும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நான் உடனடியாக காலி செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினர்.
கும்பலுடன் கிராமத் தலைவரும் இருந்தார். காவல்துறை உயரதிகாரி வந்த பிறகும் கூட கும்பல் என்னை மிரட்டுவதை நிறுத்தவில்லை. பஸ்தார் மாவட்ட கலெக்டருக்கு இது பற்றி தெரிவித்துள்ளேன்” என்றார்.
இது குறித்து போலீஸ் தலைமை ஆய்வாளர் சிவ் ராம்பிரசாத் கல்லுரியை தொடர்பு கொள்ள தி இந்து (ஆங்கிலம்) முயற்சி செய்தபோது அவர் அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.
ஆனால் போலீஸ் ஆதரவு கொண்ட மாவோயிஸ்ட் எதிர்ப்புக் குழுவைச் சேந்த ஒருவர் பாட்டியாவை, “மாவோயிஸ்ட் கைக்கூலி” என்று வர்ணித்ததோடு அவரை வெளியேறுமாறு மிரட்டியதாகவும் குறிப்ப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT