Published : 27 Oct 2014 09:21 AM
Last Updated : 27 Oct 2014 09:21 AM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங் உள்பட தற்போதைய மக்களவை யின் 401 எம்.பி.க்கள் இதுவரை தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை அறிவிக்காமல் உள்ளனர்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்களவை செயலாளர் அளித் துள்ள பதிலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
மக்களவை உறுப்பினர்கள் சொத்து அறிவிப்பு விதிகள் 2004-ன் கீழ் ஒரு உறுப்பினர் பதவியேற்ற 90 நாட்களுக்குள் சொத்து விவரங்களை மக்களவை செயலாளரிடம் அளிக்க வேண்டும். ஆனால் செப்டம்பர் 26 வரை இந்த எம்.பி.க்கள் சொத்து விவரங்களை எங்களிடம் அளிக்கவில்லை என்று மக்களவை செயலகம் கூறியுள்ளது.
மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, நிதின் கட்கரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
கட்சி வாரியாக பாஜக உறுப் பினர்கள் 209, காங்கிரஸ்–31, திரிணமூல் காங்கிரஸ்-27, பிஜு ஜனதா தளம்-18, சிவசேனா– 15, தெலுங்கு தேசம் கட்சி–14, அதிமுக–9, தெலங்கானா ராஷ்டிர சமிதி–8, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்–7, லோக் ஜனசக்தி கட்சி-6, தேசிய மாநாடு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலா 4, அகாலி தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி தலா 3, ஐக்கிய ஜனதா தளம், அப்னா தளம் தலா-2 என 401 எம்.பி.க்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த எம்.பி.க்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
சொத்து விவரம் அளிக்காத பிற முக்கிய எம்.பி.க்கள்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், ராதா மோகன் சிங், ஆனந்த் கீதே, அனந்தகுமார், ராம்விலாஸ் பாஸ்வான், வீரப்ப மொய்லி, மெஹ்பூபா முப்தி, கிரண் ரிஜிஜு மற்றும் சுப்ரியா சுலே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT