Published : 25 Dec 2013 03:40 PM
Last Updated : 25 Dec 2013 03:40 PM
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் புதன்கிழமை 89 வயதை நிறைவு செய்து, 90-வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
வாஜ்பாய் பிறந்த நாளை முன் னிட்டு, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவை துணைத் தலைவர் கரிய முண்டா, பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, அனந்த் குமார், ஹர்ஷ் வர்தன் மற்றும் விஜேந்திர குப்தா உள்ளிட்டோரும் வாஜ்பாயை சந்தித்து வாழ்த்தினர்.வாஜ்பாயை வாழ்த்துவதற்காக, அவர் பிறந்த குவாலியர் மற்றும் அவரது தொகுதியான லக்னௌ ஆகிய ஊர்களிலிருந்து வந்த ஏராளமானோர் காலை முதல் அவரது வீட்டுக்கு முன்பு காத்திருந்தனர். எனினும், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவரை சந்திக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்த வாஜ்பாய் கவிஞராக தனது வாழ்க்கையை தொடங்கி னார். பின்னர் பத்திரிகையாளராக இருந்த அவர், அரசியலில் ஈடுபட்டு உயரிய பதவியை அடைந்தார். கூட்டணி அரசியலின் குருவாக கருதப்படும் வாஜ்பாய், 24 அரசியல் கட்சிகளின் பேராதரவுடன் 5 ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
நிதீஷ் குமார் வாழ்த்து
பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான நிதீஷ் குமார் வாஜ்பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் டெல்லியிலிருந்து பாட்னா திரும்பிய அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், "வாஜ்பாய் பிறந்த நாளில் அவருக்கு எனது வாழ்த்துகள். அவரது தலைமையில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதைய பாஜக தலைவர்கள் வாஜ்பாயின் கொள் கையிலிருந்து விலகி உள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT