Last Updated : 24 Jan, 2017 10:08 AM

 

Published : 24 Jan 2017 10:08 AM
Last Updated : 24 Jan 2017 10:08 AM

பட்ஜெட்டை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்திய பட்ஜெட் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப் படும். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. மறு நாளே 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்த மாநிலங்கள் தொடர்பான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், சலுகைகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, மத்திய பட்ஜெட்டை மார்ச் மாதத்திற்குப் பின்பு ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘மத்திய பட்ஜெட் வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கும் என் பதற்கு ஏதாவது ஓர் ஆதாரத்தை உங்களால் காட்ட முடியுமா? பட்ஜெட்டை முன்கூட்டியே தாக் கல் செய்வது சட்ட விரோதம் என் கிறீர்கள். எந்த சட்டப் பிரிவின் கீழ் அது சட்ட விரோதம் என்று சுட்டிக் காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், பட்ஜெட்டை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x