Published : 17 Feb 2014 01:07 PM
Last Updated : 17 Feb 2014 01:07 PM

மத்திய இடைக்கால பட்ஜெட்: கார்கள், இரு சக்கர வாகனங்கள் விலை குறையும்

மத்திய இடைக்கால பட்ஜெட்டில், உற்பத்தி வரி குறைப்பு அறிவிப்பின் காரணமாக, கார்கள், இரு சக்கர வாகனங்களின் விலை குறையும்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று 2014-14-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில், சிறிய ரக கார்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மீதான உற்பத்தி வரி, 12-ல் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த உற்பத்தி வரி குறைப்பு, புதிய அரசு முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் வரை, அதாவது நடப்பு ஆண்டு ஜூன் 20 வரையிலான காலக்கட்டத்துக்குப் பொருந்தும்.

இதேபோல், நடுத்தர மற்றும் பெரிய கார்களின் உற்பத்தி வரி 24-ல் இருந்து 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.யூ.வி. வகை கார்களுக்கான உற்பத்தி வரி 30-ல் இருந்து 24 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் எதிரொலியாக, பங்குச்சந்தையில் மோட்டார் நிறுவனப் பங்குகள் வெகுவாக ஏற்றம் கண்டன.

முன்னதாக, 2013 நிதியாண்டில் கார்களின் விற்பனை 5 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x