Published : 21 Oct 2013 09:28 AM Last Updated : 21 Oct 2013 09:28 AM
தொகுதிக்கு ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஆம் ஆத்மி கட்சி
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இதுதவிர ஒட்டுமொத்தமாக ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
குடிசை இல்லாத நகரம், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்த்துதல், அனைவருக்கும் சுகாதார வசதி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தினமும் 700 லிட்டர் இலவச தண்ணீர், மின்கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பொதுவான தேர்தல் அறிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், "பொதுவாக அரசியல் கட்சிகள் மக்களின் தேவைக்கேற்ப தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதில்லை. ஆனால் அந்தந்த தொகுதி மக்களின் தேவையை ஆராய்ந்து அதற்கேற்ப 70 தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட உள்ளோம்" என்றார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
WRITE A COMMENT
Be the first person to comment