Published : 24 Jun 2017 09:37 AM
Last Updated : 24 Jun 2017 09:37 AM
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதன் தலைவராக சதலவாடா கிருஷ்ண மூர்த்தி இருந்தார். தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
ஆனால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் தலைவர் பதவி வகிக்க பலர் போட்டிப் போட்டு வருகின்றனர். நடிகரும் எம்பி-யுமான முரளி மோகன், என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா, எம்பி சாம்பசிவ ராவ் ஆகியோர் தங்களுக்கே அறங்காவலர் தலைவர் பதவி வேண்டுமென முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஏழுமலை யானை தரிசிக்க நேற்று காலை ஆந்திர மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா வந்தார். தரிசனம் முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட விஜயவாடா கனக துர்க்கையம்மன் கோயில், ஸ்ரீசைலம் சிவன் கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பதவிக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர் தேர்வு செய்யப் படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT