Published : 14 Jan 2014 11:25 AM
Last Updated : 14 Jan 2014 11:25 AM

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: டெல்லியில் ரத்து

டெல்லியில் மல்டிபிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை அமல்படுத்துவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசில் வழங்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லி தொழில் துறை செயலாளர் அமித் யாதவ் செய்தியாளர்களிடம் திங்கள் கிழமை கூறுகையில், "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர் பான உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்து மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம் பாட்டுத் துறைக்கு (டிஐபிபி) கடி தம் எழுதி உள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x