Published : 01 Oct 2014 03:20 PM
Last Updated : 01 Oct 2014 03:20 PM
உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரணத் தொகையில் இருந்து வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர், 45 பேர் காயமடைந்தனர். 12 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாரணாசியில் இருந்து கோரக்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரயிலும் லக்னோவில் இருந்து பரூனி நோக்கி சென்று கொண்டிருந்த பரூனி எக்ஸ்பிரஸ் ரயிலும் கோரக்பூரில் இருந்து 7 கி.மி. தொலைவில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT