Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் நான்காவது முறையும் ஷீலா தீட்சித் வெற்றி பெறுவார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதன்கிழமை காலை 10 மணிக்கு தனது வாக்கை நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் பதிவு செய்த பின்னர், ‘நாங்கள் ஜெயிப்போம்’ என செய்தியாளர்களிடம் கூறினார்.
அவருடன் வாக்களிக்க வந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், ‘டெல்லி தேர்தலில் நம்பிக்கை யுடன் போட்டியிட்டோம். ஏனெனில், இங்கு அரசு தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை நிறை வேற்றி வருகிறது. பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப் பட்டது டெல்லி தேர்தலில் செல்லு படியாகாது’ என்றார்.
மேலும் கேஜரிவால் பற்றி அவர் கூறுகையில், ‘குறிப்பாக, அன்னா ஹசாரே சந்தேகம் எழுப்பி கடிதம் எழுதிய பின்னர் கேஜரிவால் செல்வாக்கு குறைந்து விட்டது’ என தெரிவித்தார்.
தயங்கிய ஷீலா
வெற்றிக்கு அறிகுறியாக விரல்களை "வி" போல் காட்டு மாறு டிவி செய்தி சேனல்கள் கேட்ட போது, ‘இதற்கு இப்போது அவசரம் வேண்டாமே’எனத் தயங்கி மறுத்து விட்டார். வாக்களிக்க வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, "டெல்லியில் பல நற்பணிகள் செய்த ஷீலாவிற்கு அதிக சீட்டுகள் கிடைக்கும்" என தெரிவித்தார். சுமார் அரை மணி நேரம் வரிசையில் நின்ற ராகுல், சகோதரி பிரியங்கா வதேரா, அவரது கணவர் ராபர்ட் வதேராவுடன் லோதி எஸ்டேட்டில் வாக்களித்தார்.
ஹர்ஷவர்தன்
கிருஷ்ணா நகர் வாக்கு சாவடியில் காலை 9.00 மணிக்கு வாக்களித்த பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பா ளர் டாக்டர் ஹர்ஷவர்தன், ‘கண்டிப்பாக பெரும்பான்மையுடன் பாஜக வெல்லும். 15 வருட இடை வெளிக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வரும். நாங்கள் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை விட மிக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவது நூறு சதவிகிதம் உறுதி’ என்றார்.
கேஜரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கேஜரிவால், ’இந்த போட்டி என்னுடையது அல்ல, மக்களுடையது. இதில் எங்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி. பல வரு டங்களாக டெல்லியில் சேர்ந்துள்ள ‘குப்பைகளை ஆம் ஆத்மி பெருக்கித் தள்ளி விடும்’ எனக் கூறினார்.
இவரது கட்சியின் தேர்தல் சின்னம் ‘துடைப்பம்' என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹனுமன் சாலை சாவடியில் தம் வாக்கை காலை 8.00 மணிக்கு பதிவு செய்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT