Last Updated : 20 Oct, 2014 09:25 AM

 

Published : 20 Oct 2014 09:25 AM
Last Updated : 20 Oct 2014 09:25 AM

11-வது முறையாக வென்ற கணபதிராவ் தேஷ்முக்

மகாராஷ்டிர மாநிலத்தில், சங்கோலா சட்டப்பேரவை தொகுதியில் 11 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற சாதனையை 88 வயதான கணபதி ராவ் தேஷ்முக் படைத்துள்ளார்.

உழவர் உழைப்பாளர் கட்சியைச் (பிடபிள்யூபி) சேர்ந்த கணபதி ராவ் தேஷ்முக், சோலாப்பூர் மாவட் டத்தில் சங்கோலா தொகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டார்.

தற்போது நடைபெற்ற தேர்தலில் இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை.

தன்னை எதிர்த்துப் போட்டி யிட்ட சிவ சேனா கட்சியின் ஷாஹாஜி பாபு பாட்டீலை 25 ஆயிரத்து 224 வாக்குகள் வித்தியா சத்தில் கணபதிராவ் தேஷ்முக் வீழ்த்தினார். இதன்மூலம் அத்தொகுதியிலும், மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலிலும் 11 முறை வெற்றிபெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கருணாநிதிக்குப் பிறகு

கடந்த 2009-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற போது, 10 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுத்தபடியாக பெற்றார்.

பெரும்பாலும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இவர் அமர்ந்திருந் தாலும், 1978-ல் சரத்பவார் தலைமை யிலான ஜனநாயக முற்போக்கு முன்னணி மற்றும் 1999-ம் ஆண்டில் காங்கிரஸ்-தேசியவாத கூட்டணி ஆட்சிகளில் இரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இவர் 11 முறை வெற்றி பெற்றுள்ள போதும் 1972 மற்றும் 1995-ம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x