Published : 14 Oct 2014 10:18 AM
Last Updated : 14 Oct 2014 10:18 AM
மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை யுடன் ஓய்ந்தது. இரு மாநிலங் களிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இரு மாநிலங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இத்தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். இரு மாநிலங் களிலும் 30-க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்றார். வாரிசு அரசி யலையும், ஊழலையும் எதிர்த்து குரல் கொடுத்தார்.
இந்த இரு மாநிலங்களிலும் பாஜக தரப்பில் பிரபலமான தலைவர்கள் இல்லாத நிலையில், பிரச்சாரத்தை முன்னணியில் இருந்து மோடி நடத்தினார். மகா ராஷ்டிராவில் நீண்ட காலமாக கூட்டணியிலிருந்த சிவசேனா கட்சி யிலிருந்து பிரிந்துவிட்ட நிலையில், பாஜக தனித்து தேர்தலை சந்திக் கிறது. அதே போல காங்கிரஸ் கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் காங்கிரஸ் தரப்பில் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண், தேசியவாத காங்கிரஸ் சார்பில் தலைவர் சரத் பவார், மூத்த தலைவர் அஜித் பவார், சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் ராஜ் தாக்கரே ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமான பொதுக்கூட்டம், பேரணி, தெருமுனைக் கூட் டங்கள் போன்றவை தவிர, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமும் பரவ லாக பிரச்சாரம் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடை பெறவுள்ள 288 தொகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.25 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இது தவிர பீட் மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ஹரியாணாவில்…
ஹரியாணாவில் தேர்தல் நடை பெறவுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 52 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
இங்கு அனைத்துத் தொகுதி களிலும் பலமுனைப் போட்டி உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி, பாஜக, இந்திய தேசிய லோக் தளம், ஹரியாணா ஜான்கித் காங் கிரஸ், ஹரியாணா ஜன் சேத்னா, ஹரியாணா லோகித், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி யுள்ளன.வழக்கு ஒன்றில் சிறைத் தண்டனை பெற்ற இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, உடல் நலிவுற்றதைக் காரணம் காட்டி ஜாமீன் பெற்றி ருந்தார். இந்நிலையில், நீதிமன்ற நிபந்தனைகளை மீறி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங் கேற்றார். இதையடுத்து, அவரை திஹார் சிறையில் சரணடையுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. காங்கிரஸ் தரப்பில் தற் போதைய முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடா, ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடை பெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 19-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT