Published : 20 Sep 2016 06:16 PM
Last Updated : 20 Sep 2016 06:16 PM
காஷ்மீர் மாநிலம் யூரி எல்லைப் பகுதியில் நேற்று ஊடுருவ முயன்ற 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
யூரி ராணுவ முகாம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட் டுள்ளன. பாரமுல்லா மாவட்டம், யூரி எல்லை லசிபுரா பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் எல் லையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அந்தப் பகுதியில் பாதுகாப்பு அரண் அமைத்த ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தடுத்து தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையே சில மணி நேரம் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்ற தீவிர வாதிகள் பின்வாங்கி தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
இதே பகுதியில் இந்திய நிலை களைkd குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று திடீர் தாக்கு தலை நடத்தியது. இந்திய ராணு வத்தின் கவனத்தை திசை திருப்பி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட் டிருந்தது. அந்த;d சதியை வெற்றி கரமாக முறியடித்துவிட்டோம் என்று தெரிவித்தன.
காஷ்மீர் விவகாரம்
ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பு வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
இதற்காக காஷ்மீரில் கல வரத்தை தூண்ட அந்த நாடு கோடிக் கணக்கில் பணத்தை வாரியிறைத்து வருகிறது. காஷ்மீர் முதல்வர் மெகபூபாவே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இந்த நேரத்தில் காஷ்மீர் முழுவதும் தாக்குதல் களை நடத்த பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய முயற்சி நடக் கிறது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊரடங்கு வாபஸ்
ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஸ்ரீநகரில் டவ்ன்டவுன், ஹர்வான் பகுதியில் 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்கள் தவிர, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஹர்வான் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் ஒரு சிறுவன் இறந்ததற்கு 4-வது துக்க நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT