Published : 12 Jan 2014 01:00 PM
Last Updated : 12 Jan 2014 01:00 PM
தமிழக விஞ்ஞானி ராம் ராஜ சேகரன் மீது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தினர். இது கர்நாடக தமிழர்களின் மன உணர்வுகளை பாதித்துள்ளது.
மத்திய அரசின் உணவு தொழில் நுட்ப ஆய்வு மையம் மைசூரில் உள்ளது. இதன் இயக்குநராக, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த விஞ் ஞானி ராம் ராஜசேகரன் கடந்த 17 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மைசூர் பல் கலைக்கழகத்தில் சர்வதேச கருத் தரங்கு வியாழக்கிழமை நடைபெற இருந்து. இதில் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அதனைத் தொடங்கி வைக்க வந்தார். அப்போது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் “ராஜசேகரன் கன்னடமொழிக்கும் கன்னட மக்களுக்கும் எதிராக செயல்படுகிறார். அவரை வன்மை யாக கண்டிக்கிறோம்” எனக்கூறிக் கொண்டு அவரது கார் மீது பாய்ந்தனர். ராம் ராஜசேகரன் மீது கருப்பு மையை வீசினர். அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். மேலும் அவரை காரைவிட்டு இறங்கி வரச்சொல்லி கண்ணாடியையும் கதவையும் உடைக்க முயற்சித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர்களும் காவலுக்கு நின்றிருந்த போலீஸா ரும் ராம் ராஜசேகரனை அவர்களி டமிருந்து மீட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட குண்டர் களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்த மேலும் இரு பேராசியர்கள் மீதும் கருப்பு மையை வீசிவிட்டு தப்பினர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மைசூர் மாநகர காவல் துறை உதவி ஆணையர் ராஜண்ணா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், "நாராயண கவுடாவை தலைவராகக் கொண்டு இயங்கும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 பேரை கைது செய்துள்ளோம். விரைவில் அனைவரையும் கைது செய்து விடுவோம்” என்றார்.
இந்த சம்பவம் குறித்து ராஜ சேகரனுடன் உணவு தொழில்நுட்ப ஆய்வு மையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வரும் என்.பாஸ்கர் கூறுகையில், “ராஜசேகரன் கன்னட மொழிக்கும் கன்னட மக்களுக்கும் எதிரானவர் இல்லை. இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக் காக பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார். பணி யாற்றாமல் ஏமாற்றிக் கொண் டிருந்தவர்களை கண்டித்ததால் அவர் மீது இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT