Published : 22 Oct 2014 10:22 AM
Last Updated : 22 Oct 2014 10:22 AM
அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறோம் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்த அவரிடம், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை மீறி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அந்த வகையில் பாகிஸ்தானுடனான அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்தியா விரும்புகிறது. அதேநேரம் தீவிரவாதத்தைத் பொறுத்தவரை இந்தியா பொறுமையைக் கடைப்பிடிக்காது என்று தெரிவித்தார்.
சீன ஊடுருவல் விவகாரம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி யது. இதுபோல் இந்திய பகுதிகளுக்குள் சீன ராணுவம் அவ்வப் போது ஊடுருவி வருவது குறித்து அஜித் தோவல் அளித்த பதில் வருமாறு: இந்தியாவின் மிக முக்கியமான அண்டை நாடாக சீனாவை பார்க் கிறோம். அந்த நாட்டுடன் பல நூற் றாண்டாக நல்லுறவை பேணி வந் துள்ளோம். 1962-ம் ஆண்டில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடை பெற்றன. அதன்பிறகு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பொருளாதார, வர்த்தக உறவு மேம்பட்டி ருகிறது.
இருப்பினும் இந்திய இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதை சகித்துக் கொள்ள முடியாது. சீனாவுட னான எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT