Last Updated : 18 Oct, 2014 08:06 PM

 

Published : 18 Oct 2014 08:06 PM
Last Updated : 18 Oct 2014 08:06 PM

டீசல் விலை நிர்ணயம்: எண்ணெய் நிறுவனங்களிடமே விடப்பட்டது

டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே விட மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

டீசல் விலை நிர்ணயம் மீதான அரசுக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு எண்ணெய் நிறுவனங்களிடம் விலை நிர்ணயம் விடப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

மத்திய அரசின் மானியச் சுமை இதன் மூலம் நீங்கும் என்று அவர் தெரிவித்தார். ஆகவே, “பெட்ரோல் விலை போலவே, டீசல் விலையும் சந்தையே தீர்மானிக்கும்” என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதன் உடனடி விளைவாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைக்கப்படுகிறது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இது சில்லறை விற்பனைச் சந்தையில் தனியார் எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கடந்த 2013ம்ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 பைசா வீதம் கடந்த 20 மாதங்களில் 19 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த குறிப்பட்ட காலத்தில் மட்டும ரூ. 11.81 பைசா விலை உயர்த்தப்பட்டது குறித்ப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x