Last Updated : 20 Oct, 2014 10:06 AM

 

Published : 20 Oct 2014 10:06 AM
Last Updated : 20 Oct 2014 10:06 AM

2016-ல் டெல்லி மெட்ரோவில் 200 நிலையங்கள்

2016ம் ஆண்டு டெல்லி மெட்ரோ கட்டுப்பாட்டின்கீழ் 200க்கும் மேற்பட்ட நிலையங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகில் 200க்கும் அதிகமான நிலையங்களைக் கொண்டுள்ள 7வது மெட்ரோ ரயில் சேவை என்று டெல்லி மெட்ரோ பெயர்பெறும்.

மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் முடிந்தால், 241க்கும் மேற்பட்ட நிலையங்கள் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ஆசியாவில் ஷாங்காய், டோக்கியோ மற்றும் சியோல் ஆகிய நகரங்களுக்கு அடுத்ததாக அதிகளவில் மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டுள்ள நகரமாக‌ டெல்லி மாறும்.

வரும் 2016ம் ஆண்டு டெல்லி மெட்ரோ 330 கிலோமீட்டர் தூரத்துக்கு விரியவடையும். நான்காம் கட்ட கட்டுமானப் பணிகள் முடிந்தால், மேலும் 103 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ விரிவடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x