

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் குழந்தைகள் திரைப்பட திருவிழாவை மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி தொடங்கி வைத்தார்.
வியாழக்கிழமை தொடங்கிய திருவிழா வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி, பாலிவுட் கவிஞர் குல்சார், நடிகர்கள் ரன்வீர் கபூர், ராணா, குழந்தை நட்சத்திரங்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
முதல்வர் கிரண்குமார் ரெட்டி பேசியபோது, குழந்தைகள் திரைப்பட திருவிழாவுக்கு ஹைதராபாதில் நிரந்தர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, இங்கு ஆண்டுக்கு இரண்டு முறை திரைப்பட திருவிழா நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
அமைச்சர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசியபோது, பழமைவாதம் ஒழிய வேண்டும், அனைத்து நம்பிக்கை, கருத்துகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.